Share This Post

By Peter Lee  
Tamil Translation: Mr. Christopher A/L Arulsamy

குடும்ப மரபுரிமையை விளக்குவதற்கான ஒரு கற்பனைச் சிறுகதை

…. பீட்டர் லீ ( by Peter Lee )

ஜிம் வோங் மெதுவாக கண்களைத் திறந்த போது, மிக மெலிந்த குரலில், “எனக்கு கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா?” என்று கிசுகிசுத்தார்.

அவரது மனைவி மேரி, அவரின் படுக்கையருகில் நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தவர், உடனே சற்றே வெந்நீரை பருக கொடுத்தார். அதே நேரத்தில், அவர்களின் மகள் கிம், அவரை சௌகரியமாக அமரும்படி மருத்துவமனை படுக்கையின் தலைப்பகுதியில் மெதுவாக உயர்த்தினார்.

மேரி ஒரு தண்ணீர் குவளையை உதடருகில் கொண்டு சென்றார். அவர் தண்ணீரை அருந்தும்போது, மங்கலாக இருந்த அவரது பார்வை மெதுவாக தெளிவடைந்தது. ஜன்னல் வழியே வந்த ஒளி அறையை கனவுபோல் உணர வைத்தது.

தன்னைச் சுற்றி மனைவி மற்றும் மூன்று பெரிய பிள்ளைகள் சார்ல்ஸ், கிம், பாட்ரிக் – நிற்க, ஜிம் மிகவும் பலவீனமாகவும் களைப்பாகவும் இருந்தாலும், இன்னும் வேலை பற்றியே யோசித்தார்.

ipoh wills writing, estate planner ipoh perak malaysia

குடும்பத்தின் உற்பத்தி நிறுவனத்தை நிர்வகித்து வந்த சார்ல்ஸையும் கிம்மையும் நோக்கி அவரை கேட்டார், “அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?”

கடுமையான இதய நோயும் லூகிமியாவும் இருந்தபோதும், வேலைக்கே வாழ்ந்த தந்தையின் இயல்பை அறிந்த கிம் உடனே பதிலளித்தார், “அப்பா, அலுவலகம் பற்றி கவலைப்படாதீர்கள். சார்ல்ஸும் நானும் பார்த்துக்கொள்வோம்.”

பின்னர் ஜிம் தனது பார்வையை அறையின் அடியில் பதற்றத்தில் நின்றிருந்த பாட்ரிக்கிடம் திருப்பினார். பாட்ரிக் நீண்ட காலமாக குடும்பத்தின் பிரச்சனையான மகன்; சூதாட்டமும் மது பழக்கமும் காரணமாக அடிக்கடி பணம் கடன் வாங்குபவன். ஜிம்மின் கண்களில் கவலையும் ஏமாற்றமும் ஒரே நேரத்தில் தெரிந்தது.

ஜிம் சற்று அமைதி நிலைக்கு வந்தபின், பாட்ரிக் தந்தையின் கையைப் பிடித்து, “அப்பா… அம்மாவுடன் தனியாக பேசலாமா?” என்றான்.

கிம்மின் கண்கள் சுருங்கின. “இங்கே சொல்லக்கூடாதா? இங்கே யாரும் அந்நியர் இல்லையே.”

மேரியின் செல்லப்பிள்ளை என்பதால், பாட்ரிக் தாயை நோக்கி எதிர்பார்ப்போடு பார்த்தான். சிறிது நேரம் அமைதிக்குப் பின், மேரி மெதுவாகச் சொன்னார்: “சார்ல்ஸ், கிம் … கொஞ்ச நேரம் தனியாக இருக்கலாமா?” இருவரும் எரிச்சலுடன் வெளியே சென்றனர்.

வெளியில் காத்திருந்தபோது, சார்ல்ஸ் மெதுவாக கிம்மிடம் கேட்டான்: “அப்பா, என்றாவது உயில் எழுதியிருக்கிறாரா?” கிம் தலை அசைத்தாள்.

“எனக்கு ஒன்றும் சொன்னது இல்லை. அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் எழுதியிருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இல்லையென்றால், உள்ளே இருக்கும் அந்த ஆளால் பெரிய குழப்பம் வரும். எப்போதும் பணம் கேட்கிறார்.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பாட்ரிக் திடீரென அறையிலிருந்து வெளியே வந்து செவிலியரை அழைத்துக் கத்தினான். சார்ல்ஸும் கிம்-உம் ஓடிச் சென்று பார்த்தபோது, தமது தந்தை கடுமையாக மூச்சுத்திணறி சுவாசக் குழாய் அடைத்திருந்தது.

செவிலியர்கள் உடனே வந்து மீட்பு முயற்சிகள் செய்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே ஜிம் உணர்விழந்தார். அவரது இதயத் துடிப்பு நின்றது. துடிப்பை சோதிக்க செவிலியர் மெதுவாக தலை அசைத்தார். ஜிம் இறந்துவிட்டார்.

மேரியும் கிம்மும் படுக்கையருகே தேம்பி அழுதனர். சார்ல்ஸும் பாட்ரிக்கும் உதவியின்றி நின்று அவர்களைத் தேற்ற முயன்றனர். தூக்கத்திலும் கிம் பாட்ரிக்கையும் கூர்ந்து பார்த்து கத்தினாள்: “அப்பாவிடம் என்ன சொன்னாய்?”

“கிம், இப்போது வேண்டாம்,” என்று மேரி கடுமையாக தடுத்தார். பின்னர் நடுங்கும் குரலில் சார்ல்ஸிடம், “உன் தந்தையின் விருப்பப்படி இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்து, புத்த குருக்களை அழை,” என்றார்.

சார்ல்ஸ் வெளியே சென்று இறுதிச்சடங்கு சேவை வழங்குபவரை அழைக்கும்போது, ஒரு நபர் அவரை அணுகினார்; இரங்கல் தெரிவித்து, ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்தார். “நான் இறுதிச்சடங்கு சேவை இயக்குநர். உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் எதிர்கால தலை முறைகளுக்கும் உதவ முடியும்.”

இத்தகைய தருணத்தில் இப்படி ஒரு வியாபார பேச்சு வந்தது சார்ல்ஸை அதிர்ச்சியடையச் செய்தது.

“என் தந்தையின் மரணத்திற்கு உங்கள் ‘எதிர்கால தலைமுறையினருக்கும்’ என்ன தொடர்பு?” என்று அவர் மனதில் எண்ணினார்.

“நன்றி, ஆனால் நாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டோம்,” என்றார்.

பின்னர் ஜிம்மின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இரங்கல் காரியங்கள் நடைபெற்றது.

அடுத்த நாள் மாலை, பிரார்த்தனைக்கு முன் குடும்பம் சாப்பிடும்போது, பாட்ரிக் திடீரென தந்தையுடன் இணைந்து வைத்திருந்த நிலையான சேமிப்பு (Fixed Deposit) கணக்குகள் பற்றி கேட்டான். அந்த சான்றிதழ்கள் பல ஆண்டுகளாக சார்ல்ஸின் பாதுகாப்பில் இருந்தன.

“இறுதிச்சடங்குக்குப்பின் பேசலாமா?” என்று சார்ல்ஸ் அதிர்ச்சியுடன் கேட்டான். பாட்ரிக் அது தன்னுடைய பணம் என்று கூறினார் உடனே கேட்டு வற்புறுத்தினான்.

சண்டை வெடிக்கும்முன் அவர்களது மனைவிகள் தலையிட்டனர். மேரி கடுமையாகச் சொன்னார்:

“பாட்ரிக்! இறுதிச்சடங்கு முடியும் வரை அமைதியாக இருக்க முடியாதா!?”

சமய குருக்கள் பிரார்த்தனையைத் தொடங்கினர். இரவு முழுவதும் நண்பர்களும் உறவினர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கிம், ஜிம்மின் சவப்பெட்டியருகே, இரண்டு குழந்தைகளுடன் அமைதியாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கவனித்தாள். அவளிடம் சென்று, “வந்ததற்கு நன்றி. நாம முன்பு சந்தித்ததாக நினைவில்லை. நான் கிம். நீங்கள்…?” என்றாள்.

“நானி சாண்ட்ரா, என்று அவள் மெதுவாக பதிலளித்தாள். “என் தந்தையின் நண்பரா?” என்று கிம் கேட்டாள்.

சாண்ட்ரா தயங்கினாள். “நான்… பத்து ஆண்டுகளுக்கு முன் உங்கள் தந்தையுடன் இருந்தேன். இவர்கள்… இவரது இரண்டு பிள்ளைகள்.”

கிம் உறைந்து போனாள். கால்கள் நடுங்கின. பேச முடியாமல் நின்றாள். சற்று தன்னைச் சமாளித்து, குடும்பத்தினரை வீட்டிற்குள் அழைத்தாள். சாண்ட்ராவை தனி அறைக்குள் அழைத்தனர்.

உள்ளே மேரி உடனே எழுந்தார்.

“சாண்ட்ரா, நீ சொன்னதை கிம் சொன்னாள். உன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இப்போது ஏன்? எங்களை மிரட்டவா?”

“இல்லை,” என்று சாண்ட்ரா அமைதியாக சொன்னாள்.

“அவரை குழந்தைகள் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன்.”

“எந்த ஆதாரம்?” என்று மேரி கேட்டார்.

சாண்ட்ரா குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை கொடுத்தாள். அவற்றை பார்த்த மேரி நாற்காலியில் சடாரென உட்கார்ந்து விட்டார்.

“இதை இறுதிச்சடங்குக்குப் பிறகு பேசலாம்,” என்று உறுதியாகச் சொன்னார்.

“இப்போது யாராவது கேட்டால், நீ ஒரு நண்பர் என்று மட்டும் சொல்லுங்கள்.” சாண்ட்ரா அமைதியாக இருந்தார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, மேரி தனது அனைத்து குழந்தைகளையும் நிறுவன அலுவலகத்திற்கு அழைத்தார். அவருடன் ஜிம்மின் அசல் உயில் வைத்திருந்த ஒரு வழக்கறிஞரும் வந்தார்.

வழக்கறிஞர் அறிவித்தார்:

“ஜிம், மரியா நிர்வாக/ நம்பிக்கையாளர் (Executor/Trustee) ஆக நியமித்துள்ளார். மேரி மறுத்தால், சார்ல்ஸும் கம்மம் இணை மாற்று நிர்வாகிகளாக இருப்பார்கள்.”

சார்ல்ஸ் கேட்டான்:

“நிர்வாகி/நம்பிக்கையாளர் என்ன செய்கிறார்?”

வழக்கறிஞர் விளக்கினார்:

“அசல் ஆவணங்களை கொண்டு உயர் நீதிமன்றத்தில் Probate பெற வேண்டும். அது கிடைத்த பிறகு, அனைத்து சொத்துக்களையும் சேகரித்து, கடன்களைச் செலுத்தி, உயிலின் படி பகிர்ந்தளிக்க வேண்டும்.”

கிம் கேட்டாள்: “அப்படியென்றால், எல்லா சொத்துகளும் முதலில் நிர்வாகியிடம்தானே செல்லும்?” “ஆம்,” என்று அவர் பதிலளித்தார்.

பின்னர் அவர் பகிர்மானத்தை விளக்கினார்:

உயிலின் பகிர்மானம்:

  • ஜிம்மின் தனிப்பட்ட வங்கி கணக்குகளின் 50% அமெரிக்க
  • மீதமுள்ள 50% குழந்தைகளுக்கு சமமாக

ஆனால் பாட்ரிக்கின் பங்கு Testamentary Trust-ல் வைக்கப்படும்:

  • பாட்ரிக்கிற்கு மாதம் RM2,000.00
  • அவரது மனைவிக்கு குழந்தைகளுக்காக மாதம் RM2,000.00
  • மருத்துவம் மற்றும் கல்வி சலுகைகள் தேவையானபோது
  • இளம் குழந்தை 21 வயதை அடையும் வரை அல்லது நிதி முடியும் வரை Trust நீடிக்கும்
  • முடிவில் மீதம் இருப்பது பாட்ரிக், மனைவி, குழந்தைகளுக்கு சமமாகப் பகிரப்படும்.

பாட்ரிக் வெடித்தான்:

“என் பங்கை நேரடியாக ஏன் தரக்கூடாது?!”

“மாற்ற முடியாது,” என்று வழக்கறிஞர் சொன்னார்.

“நிர்வாகி/நம்பிக்கையாளரை பின்பற்ற வேண்டும்.”

பாட்ரிக் சார்ல்ஸை நோக்கி சிரித்தான்.

“பார்த்தாயா? அந்த நிலையான வைப்பு (Fixed Deposit) பணத்தை எல்லாம் கொடு!”

சார்ல்ஸ் ஆழ்ந்த மூச்சு விட்டான்.

“அந்த கணக்குகள் ஒரு வருடத்திற்கு முன்பே அப்பா மூடியுள்ளார். எல்லாவற்றையும் அவரது தனி கணக்குக்கு மாற்றிவிட்டார்.”

பாட்ரிக் கோபத்தில் சிவந்தான். “அம்மா! என்ன நடக்கிறது?” நீங்கள்தான் உதவ வேண்டும்!”

மேரி நெடுமூச்சு விட்டார். “இது உன் தந்தையின் முடிவு, உன்னையும் உன் குடும்பத்தையும் பாதுகாக்கவே. ஏற்றுக்கொள்.”

“நானி அவரின் உயில் சவால் செய்வேன்!” என்று பாட்ரிக் கத்தினான்.

“நல்லது,” என்று மேரி குளிர்ச்சியாகச் சொன்னார்.

“அப்படியானால், நானி நிர்வாகி பதவியை விட்டு, சார்ல்ஸும் கம்மம் பார்த்துக்கொள்ளட்டும்.”

வழக்கறிஞரிடம் தலை ஆட்டினார்.

மற்ற சொத்துகள்

குடும்ப நிறுவனத்தின் பங்குகளை, முதலீடுகள், நிலையான சொத்துகள் அனைத்தும் முழுமையாக மேரிக்கே.

மேரி ஜிம்முக்கு முன்பு இறந்திருந்தால், குழந்தைகளுக்கு சமமாக – பாட்ரிக்கின் பங்கு Trust அடியில் வைக்கப்படும்.

பின்னர் மேரி சாண்ட்ராவை நினைத்தார்.

“அவளுக்கு ஏதாவது உரிமை இருக்கிறதா?”

“இல்லை,” என்று வழக்கறிஞர் சொன்னார்.

“அவரை உயிலின் பயனாளி அல்ல.”

ஆனால் அவரை மறுபடியும் சொன்னார்:

“ஜிம், சாண்ட்ரா மற்றும் குழந்தைகளுக்காக தனியாக அமைத்த காப்பீட்டு நம்பிக்கை (Insurance Trust) உள்ளது. அவர் இறந்ததும் அந்த நிதி அவர்களுக்கு செல்லும்.”

அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர். ஜிம், சொத்துகளை ஒரு பாதிப்பு இல்லாமல் அவரவர்களுக்கு முறையாக பங்குபிரித்து தனது எல்லா சொத்தையும் பாதுகாத்திருந்தார்.

வழக்கறிஞர் ஃபைலை மூடி, ஜிம்மின் இறுதி செய்தியை வாசித்தார்:

“என் பிள்ளைகள் தங்கள் தாயைக் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். என் பிள்ளைகள் ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் அன்போடும் இருப்பார்கள் என்று விரும்புகிறேன்.

இந்த உயில் முழுமையானவை அல்லாமல் இருக்கலாம். ஆனால், அவை மிக கவனத்துடன்,

‘நான் செய்வது அனைத்தும் உங்களுக்காகத்தான்’ என்ற உணர்வுடன் செய்யப்பட்டவை.