Share This Post

By Peter Lee  
Tamil Translation: Mr. Christopher A/L Arulsamy

(தமிழ் மொழி பெயர்ப்பு)

பல வருடங்களுக்கு முன், ஒரு நண்பரின் மகளின் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். அந்த இரவில் நான் கண்டது, வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை மீண்டும் நினைவூட்டியது. ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், நம்மில் பலர் திருமண அழைப்புகளைப் பெறுவது வழக்கம். அந்த திருமணமும் அதற்கு விதிவிலக்கில்லை.

வழக்கம்போல், விருந்தினர்கள் மேடைக்கு சென்று தங்களின் பாடல் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இரண்டாம் உணவு வழங்கப்பட்டதும், வயதான ஒரு தம்பதியினர் மேடைக்கு வந்து ஒரு டூயட் பாடல் பாடினர். அவர்கள் அழகாகப் பாடினர், கூட்டமும் மகிழ்ச்சியுடன் கைதட்டியது. ஆனால் கைதட்டல் முடிந்ததும், அந்த மூத்த மனிதர் திடீரென மேடையேறி விழுந்தார்.

அங்கு குழப்பம் ஏற்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஓடி வந்தனர்; ஒருவரோ உடனே CPR செய்யத் தொடங்கினார். அந்த மனிதரின் இதயம் நின்றுவிட்டது. பதினைந்து நீண்ட நிமிடங்களுக்குப் பிறகு, ஆம்புலன்ஸ் வந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. அந்த இரவு, என் நண்பர் அவர் வந்தவுடனேயே மரணமடைந்ததாகத் தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் சென்ற பிறகு, நிகழ்ச்சித் தொகுப்பாளர் பத்து நிமிட இடைவேளை அறிவித்தார். மண்டபம் முழுவதும் அமைதியாயிற்று – கண்ணாடிகள் தொட்ட சத்தம் கூட இடத்துக்கு இல்லாததாகத் தோன்றியது. நிகழ்ச்சி மீண்டும் தொடங்கிபோது, மூத்த விருந்தினர்கள் யாரும் பாட மேடைக்கு வரவில்லை. அனைவரும் வாழ்க்கை எவ்வளவு மதிப்புள்ளதென சிந்தித்திருந்தார்கள். அதன் பிறகு, மேடை முழுவதும் இளைய தலைமுறையினர் பாடல்களால் நிரம்பியது.

அப்படி ஒரு விஷயத்தை முதன்முறையாகக் கண்டதால், அந்த ஆண்டில் இது ஒரே நிகழ்வு என நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. ஆண்டு முடிவதற்குச் சில நாட்களாக முன், ஒரு நெருங்கிய நண்பர் மலை சவாரி மோட்டார் வண்டி விபத்தில் திடீரென உயிரிழந்தார் என்பதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் கடைசியாகப் பேசியது ஒரு வாரம் முன்புதான் அவரின் கிறிஸ்மஸ் வாழ்த்து, அவர் அனுப்பிய கடைசி செய்தியாகப் போனது. அவரை நாற்பதுகளின் நடுப்பகுதியில் இருந்தார்; தனது வேலை வாழ்க்கையின் உச்சத்தில், இளைய குடும்பத்துடன் பிரகாசமான எதிர்காலம் கொண்டவர். அவரின் இழப்பு என்னை ஆழமாகப் பாதித்தது. நல்லவர்கள் உண்மையிலேயே விரைவில் செல்கிறார்கள் என்பதே என் எண்ணம்.

இந்த இரண்டு சம்பவங்களும் வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றதும் எவ்வளவு எளிதில் நழுவிப்போகக் கூடியதுமாக உள்ளது என்பதை வலுவாக நினைவூட்டின. மரணம் முதுமையை காத்திருக்காது- அது எப்போது வேண்டுமானாலும், யாரையும் எடுத்துக்கொள்கிறது. நான் பின்னோக்கிப் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் ஒரு சிறந்த இடத்திற்குச் சென்றிருக்கலாம் என் நம்புகிறேன். அவர்கள் போகுமுன், தங்கள் குடும்பத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து, தங்கள் உயிலை (Will) எழுதித் தந்திருக்கிறார்களா என மட்டுமே எதிர்ப்பார்ப்போடு இருக்கிறேன்.

 

ipoh wills writing, estate planner ipoh perak malaysia

ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை என்றால்?

மரணமடைந்தவர் முஸ்லிம் அல்லாதவர் என்றால்

மேடையில் விழுந்த அந்த மூத்த மனிதரை எடுத்துக்கொண்டால், அவர் உயில் (Will) எழுதாமல் இறந்திருந்தால், அவரது முடும்பம் முதலில் Letter of Administration (L.A.) பெற விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். இது சிக்கலான செயல்முறை; மேலும் அவரின் மறைந்த பெற்றோரின் மரண சான்றிதல்களைப் பெற முடியாவிட்டால், இது இன்னும் சிரமமாகும், ஏனெனில் சட்டப்படி அவர்களும் வாரிசுதாரர்கள் என கருதப்படுகிறார்கள்.

மலேசியாவின் Distribution Act 1958 (Amended 1997) படி, ஒருவர் உயிலின்றி இறந்தால், அவரின் சொத்துக்கள் இவ்வாறு பகுக்கப்படும்:

  • ¼ துணைவிக்கு
  • ¼ பெற்றோருக்கு
  • ½ குழந்தைகளுக்கு

பெற்றோர் உயிரில் இல்லையென உறுதி செய்யப்பட்ட பிறகு மட்டுமே, பங்கு மாறும்:

  • 1/3 துணைவிக்கு
  • 2/3 குழந்தைகளுக்கு

ஆனால் இதற்கும், பெற்றோர் மறைந்ததை நிரூபிக்கும் ஆவணங்கள் கட்டாயம்.

மரணமடைந்தவர் முஸ்லிம் என்றால்

முஸ்லிம் குடும்பங்களில் நிலைமை வேறுபடும், ஏனெனில் வாரிசுரிமை Faraid எனப்படும் Syariah சட்டப்படி பகுக்கப்படும்.
ஒரு முஸ்லிம் மரணமடையும்போது, சொத்தின் அதிகபட்சம் மூன்றில் ஒரு பகுதியாக மட்டும் வசியாது (wasiat) மூலம் வழங்க முடியும். மீதமுள்ளவை Faraid விதிகளின் படி பகுக்கப்படும்.

உதாரணமாக, மரணமடைந்தவர் மனைவி, பெற்றோர், குழந்தைகளை விட்டுச் சென்றால்:

  • மனைவி-1/8
  • தந்தை -1/6
  • தாய் – 1/6
  • மீதமுள்ளவை குழைந்தைகளுக்கு (மகனுக்கு மகளின் பங்கில் இருமடங்கு)

சொத்துகளை நிர்வகிக்க, முதலில் Syariah Court-லிருந்து Faraid Certificate பெற வேண்டும். அதன்பின் Amanah Raya, உயர நீதிமன்றம் அல்லது Land Office போன்ற இடங்களில் Estate Administration செய்யப்படும்.

பல வாரிசுகள் இருந்தால் அல்லது சொத்துக்கள் கூட்டு பெயர்களில் இருந்தால், இப்பணிகள் நேரம் பிடிக்கலாம், சச்சரவும் ஏற்படலாம். அதனால்தான் முஸ்லிம்களும் வசியாது உருவாக்க ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

உயில் திட்டமிடல் இல்லாதபோது

என் மறைந்த நண்பரை எடுத்துக்கொண்டால் – அவர் மனைவி, சிறுவர் குழைந்தைகள், பெற்றோரைக் கொண்டிருந்தார். அவரை உயிலின்றி இறந்ததால், இன்னொரு பிரச்சனை எழலாம்: renunciation.

சட்டப்படி, அவரது பெற்றோர்களும் ¼ பங்கிற்கு உரிமையாளர்கள். மனைவி அனைத்தையும் குழந்தைகளுக்காக நிர்வகிக்க வேண்டும் என நினைத்தாலும், மாமியார் – மாமனார் தங்கள் பங்கினை
விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் ஒப்புக் கொள்வார்களா இல்லையா என்பது குடும்பத்திற்குள் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடும்.

இந்த நிலையையே intestasy என்கிறோம் – இது தாமதம், நிச்சயமின்மை, சண்டை போன்றவற்றை உருவாக்கும். சொத்துக்கள் சிக்கிக் கொள்ளும், பெயர்கள் தலைமுறையின்படி அதிகரித்து சிக்கலாம்.

அதனால்தான், உங்கள் உயில் (will) அல்லது வசியாது (wasiat) முன்கூட்டியே செய்து வைத்திருப்பது மிகவும் புத்திசாலித்தனமான செயல். இது துயரத்தில் இருக்கும் உங்கள் குடும்பத்தை தேவையற்ற மன அழுத்தம் மற்றும் சிக்கல்களிலிருந்து காப்பாற்றும்.

இவ்விரு திடீர் இழப்புகளையும் குறுகிய காலத்தில் கண்ட நான், அதை நினைத்து ஒரு வார்த்தை மட்டுமே சொல்ல முடிகிறது -இது உண்மையிலேயே மிகுந்த சொர்க்கம்…. Too Much Heaven.