– ீட்டர் லீ
நம்முள் பெரும்பாலோர் நமது வேலை பளுவைக் காரணமாகக் காட்டி நம் தனிப்பட்ட சொத்துக்களைப் பதிவு செய்வதைத் தள்ளிப் போடுகிறோம். ஆனால் உண்மையில் இதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, இது நமது முன்னுரிமைகளைக் குறித்தது. “நான் ஓய்வில்லாமல் இருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு, ஒரு நிமிடம் நின்று நம்மை நாம் இதைப்பற்றி கேட்க மறந்து விடுகிறோம்:
இன்று எனக்கு ஏதாவது நடந்தால், என் குடும்பத்தினர் எனது தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் எங்கு இருக்கின்றன என்பதை அறிவார்களா?
சமீபத்தில், ஒரு நண்பர் இந்தப் பிரச்சனையை உணர்த்தும் ஒரு துயரமான கதையைப் பகிர்ந்தார். அவரது சக பணியாளர் அர்மேனியாவின் அரெனிக்கு விடுமுறைக்காக தனியாக பயணம் செய்தார். அவரது பயணத்தின் கடைசி நாள்களில், அவர் ஒரு சுமையுந்து மோதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அதன் பின் நடந்தது மனதைக் கலங்கவைத்தது. அவருக்குத் திருமணமாகவில்லை. ஆகவே அவரின் நெருங்கிய நண்பர், அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறிய, மிகவும் சிரமப்பட்டு அவரது கணினியிலும் பிறகு அவரது கைப்பேசியிலும் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இடையில், அவரது சகோதர சகோதரிகள் அரெனிக்குச் சென்று அவரது உடலை மீண்டும் மலேசியாவிற்குக் கொண்டு வர சில சிக்கல்களால் அயல்நாட்டு நுழைவுச் சான்று (விசா) கிடைப்பதற்கு சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டது.
இது நாம் எதிர்ப்பார்க்காத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கான உணர்ச்சி மிகுந்த நினைவூட்டல் ஆகும். இது போன்ற சூழல்களை நினைக்க நாம் விரும்புவதில்லை. இருப்பினும் நாம் அதற்கான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும்.
இறந்தவர் சொத்துப்பத்திரம் (உயில்) எழுதி வைத்திருந்தால், அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்திலிருந்து சொத்துப் பகிர்ந்தளிப்பு அனுமதி ஆணையைப் பெற மனு செய்ய இயன்றிருக்கும். குறைந்தபட்சம் சொத்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, இறந்தவரின் விருப்பங்களுக்கு ஏற்ப சொத்துக்களை நிர்வகித்து பகிர்ந்தளிக்க முடிந்திருக்கும். இதன் மூலம் குடும்பத்தினர் சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களால் அலைக்கழிக்கப்படாமல், மனக்கவலையை தீர்க்க கவனம் செலுத்த முடியும்.
ஆனால் யாராவது சொத்துப்பத்திரம் இல்லாமல் இறந்துவிட்டால், அந்தச் செயல்முறை மிகவும் கடினமாகிவிடும். குடும்பத்தினர் சொத்து நிர்வகிப்பு கடிதத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்குமுன், சட்டப்படி உரிமையுள்ள எல்லா ஆதாயதாரர்களிடமிருந்தும் எழுத்து மூலம் ஒப்புதல் பெற்று, ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும். அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்த செயல்முறையைத் தொடர முடியாது. இது தீர்ந்த பிறகும், நீதிமன்றம் சட்டமுறைப்படியான உத்தரவாததாரர்களை நியமிக்க கேட்டுக்கொள்ளும். அந்த நிர்வாகிகள் சொத்து நிதியுடன் ஓடிவிடும் சூழலில் சட்டப்படி பொறுப்பு வகிப்பவர்கள் உத்தரவாதர்களே. பின்னர் சொத்துப் பங்கீடு பங்கீட்டு சட்டவிதிகளின்படி (1997 இல் திருத்தம் செய்யப்பட்டது) மேற்கொள்ளப்படும்.
பல வழக்குகளில் யாராவது சொத்துப்பத்திரம் இல்லாமல் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தினருக்கு இறந்தவரின் சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதில் இது பெரிய பிரச்சனையைக் கொடுக்கும். தெளிவான பதிவுகள் இல்லாவிடில் , குடும்பத்தினர் கண்ணைக்கட்டி விட்டதுபோல் தடுமாறுவர். முக்கியமான சொத்துகள் இருப்பதைப் பற்றிய தகவல் அறியாததால் அதைக் கைநழுவ விடக் கூட நேரிடும்.
ஆகவே, இந்தக் கதை நம் அனைவரையும் தட்டி எழுப்புவதாக அமையட்டும். நாம் இவற்றைச் செய்ய நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- சொத்துப் பத்திரம் 9 உயில் 0 எழுத வேண்டும்
- சுய சொத்துகளைப் பட்டியலிட வேண்டும், காட்டு ;
- வங்கி கணக்கு
- பங்குகள் / அறக்கட்டளை நிதி முதலீடு
- காப்புறுதி
- ஊழியர் சேம நிதி
- சொத்துடைமைகள்
- இயந்திர வாகணங்கள்
- இலக்கவியல் சொத்து
மிக முக்கியமாக , இந்தத் தகவல்களைக் குடும்பத்தினருக்குத் தேவைப்படும்போது பெறுவதற்கான பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.